பெரிக்காத்தான் நேஷனலுக்கு சரிவு தொடங்கியது

ஜோகூர் பாரு , ஆகஸ்ட் 24-

பேரிக்காதான் நசியனால் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் மேன்மை தங்கிய பகாங் சுல்தான்,சுல்தான் அப்துல்லா சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய விவகாரத்தைத் தொடர்ந்து அந்த கூட்டணியின் ஆதரவு சரிந்து வருகிறது என்று DAP துணை பொதுச் செயலாளர் லைவ் சின் டோங் தெரிவித்துள்ளார்.

இந்த சரிவுக்கு முக்கிய காரணம் பெர்சத்து கட்சியாகும். குறிப்பாக அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினால் இந்த பின்னடைவு ஏற்படத் தொடங்கியுள்ளது என்று லைவ் குறிப்பிட்டார்.

தமக்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இருந்தும், தன்னை பிரதமராக நியமிக்க அன்றைய மாமன்னரான பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அழைக்கவில்லை என்று சர்ச்சைக்குரிய கருத்தினால் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கொண்டிருந்த மக்கள் ஆதரவு சரிந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS