ஈப்போ , ஆகஸ்ட் 24-
வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, தடுப்பு சுவரில் மோதி தடம்புரண்டதில் வயோதிக தம்பதியர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 10.45 மணியளவில் ஈப்போ, கோலகங்சார் சாலையில் நிகழ்ந்தது. இதில் 75 வயது அமிருதீன் அப்துல்லா மற்றும் அவரின் மனைவி 71 வயது தே ஜமாலியா மாட் அலி ஆகிய இருவரும் தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளாகி, சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
இரவு உணவை முடித்துக்கொண்டு தனது மகள் மற்றும் மருமகனுடன் அந்த வயோதிக தம்பதியர் வேனில் வீடு திரும்பிக்கொண்டு இருநத் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இதில் அந்த வயோதிக தம்பதியரின் 52 வயது மருமகன் காயத்திற்கு ஆளானதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிதீன் தெரிவித்தார்.