அம்னோ மாநாட்டில் கண்ணீர் விட்டார் நஜீப்பின் மகள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 24

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் அம்னோ பேராளர்கள் மாநாட்டில் தலைவர் கொள்கை உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் மகள் நூருல் ஹிதாயா, சிறைச்சாலையில் இரும்பு கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் டத்தோஸ்ரீ நஜீப்பின் தலைவிதியை நினைத்து கண்ணீர் வடித்தார்.

அம்னோவின் முன்னாள் தலைவர், எங்களின் போஸ்கு…… நாடு, மக்கள், கட்சி உறுப்பினர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரு தலைவர் ஆவார்.

மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு உருமாற்றங்களை செய்து, நாட்டை சிறந்த முறையில் வழிநடத்திய பெருமைக்குரிய தலைவர் ஆவார் என்று நூருல் ஹிதாயா வர்ணித்தார்.

இந்த மாநாட்டில் நஜீப் என்ற எங்களின்போஸ்கு.. இல்லாதது வெறுமையை தருகிறது. ஒரு தலைவரை இழக்கும் நிலை அம்னோவிற்கு ஏற்பட்டு இருப்பது ஒரு துரதிர்ஷ்டமே.

ஒவ்வொரு அம்னோ மாநாட்டிலும் போஸ்கு.. வின் உரையும், அவரின் கருத்துகளும் அனல் தெறிக்கும்./ மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும்./

அந்த உன்னத நாளில் சிறப்புகளை எண்ணி மனம் புளுங்குகிறேன் என்று கூறி,நூருல் ஹிதாயா கண்ணீர் விட்டார்.

WATCH OUR LATEST NEWS