குற்றச்சாட்டை மறுத்தார் போலீஸ் படைத் தலைவர்

கோலா கிராய் , ஆகஸ்ட் 27

முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக தேச நிந்தனை குற்றச்சாட்டை கொண்டு வருவதில் போலீஸ் படை அவசரம் காட்டியதாக கூறியிருக்கும் பெர்சத்து கட்சியின் கூற்றை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடி ஹுசைன் வன்மையாக மறுத்தார்.

நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போது சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக கூறப்படும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உரிய காலகட்டத்திற்குள் இந்த விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டதும் 7 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு விட வேண்டும் என்று பொதுவாக நிர்ணயிக்கப்பபட்டுள்ள காலக்கெடுவாகும்.

அந்த வகையில் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு, சட்டத்துறை அலுவலகம் அந்த வழக்கை தொடர்வதற்கு அனுமதி வழங்கினால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற விவகாரங்களில் நாங்கள் மெத்தனப் போக்குடன் செயல்பட்டால் நாங்கள் திறமையற்றவர்கள் என்று கூட மக்கள் குற்றஞ்சாட்டக்கூடும் என்று ஐஜிபி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS