அது விஜயலெட்சுமியின் புகைப்படம்தான்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2

நடைப்பாதை பாதாளக்குழியில் விழுந்து காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலெட்சுமியின் புகைப்படம் என்று கூறிக்கொண்டு, சமூக வலைத்தளங்களில் மாறுப்பட்ட புகைப்படங்களை சில தரப்பினர் பதிவேற்றம் செய்து வந்தது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வந்தது.

எனினும் இச்சம்பவத்தில் காணாமல் போன தனது தாயார் விஜயலெட்சுமியின் இளமைத்தோற்றமிக்க புகைப்படத்தை அவரின் 20 வயது மகன் சூரியா இன்று உறுதி செய்துள்ளார்.

இதுதான் தமது தாயாரின் உண்மையான புகைப்படம் என்று கூறி, செய்தியாளர்களிடம் சூரியா மறுஉறுதி செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS