நிபோங் டெபால் , ஆகஸ்ட் 27-
பினாங்கு, நிபோங் திபால்,புக்கிட் தம்புன்-னில் ஒரு சீனப்பள்ளியில் தேசியக் கொடியான ஜாலோர் கெமிலாங்கை தலை கீழாக பறக்கவிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் உண்மையில்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
அது கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவமாகும். அந்த பழைய காணொளி தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக செபராங் பேரை செளடன் மாவட்ட போலீஸ் தலைவரான சோங் பூ கிம் விளக்கம் அளித்துள்ளார்.