குளுவாங் , ஆகஸ்ட் 27-
வெடிகுண்டை செயலிழக்கும் நடவடிக்கையில் இரண்டு போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஜோகூர், குளுவாங், தமன் ஸ்ரீ லம்பக், ஜாலான் தபா என்ற இடத்தில் ஒரு வீடமைப்பு கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்தது.
ஜோகூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அந்த இரு போலீஸ்காரர்களும் தற்போது குளுவாங், என்சே பெசார் ஹாஜா கல்சோம் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவ்விரு போலீஸ்காரர்களும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவைச் சேர்ந்தர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.