மலேசிய மக்களின் ஒற்றுமைக்கு தேசிய மொழி மூலதனமாக விளங்குகிறது

ஆகஸ்ட் 28-

புக்கிட் மெர்தாஜம் ஆக 28
இந்நாட்டில் மலேசியர்களின் ஒற்றுமைக்கு தேசிய மொழி மூலதனமாக விளங்குவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

மலேசியர்கள் தேசிய மொழியில் புலமை பெறுவதோடு அந்த மொழி மீது பற்றுக் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

இன்று இங்கு துவாங்கு பைனுன் ஆசிரியர் கல்வி கல்லூரியில் மலேசியா மடானி ஒற்றுமை கருத்தரங்கு போட்டி நிறைவு விழாவில் அவர் பேசினார்.

நாட்டில் மலேசியர்கள் மலாய் மொழியில் புலமைப் பெற இது போன்ற கருத்தரங்கு மிக அவசியம் சொன்னார்.
மலாய் மொழியை ஊக்குவிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தமது தேசிய ஒற்றுமை துறை அமைச்சு முழுமையான ஆதரவை வழங்கும் என் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் “நன்றாக பேசுங்கள்” பிரச்சாரத்தின் ஒரே காலகட்டத்தில் இந்த கருத்தரங்கு நடைபெறுவது மிக பொருத்தமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசியர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் போது பண்பாக பேச வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த பிரச்சாரம் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அது குறித்து பேசும் போது பண்பான மற்றும் பணிவான முறையில் பேச வேண்டும் என அவர் சொன்னார். அதேவேளையில் இளைய தலைமுறையினர் தேசிய மொழி மீது அதிக பற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தேசிய மொழியில் புலமை பெற அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

WATCH OUR LATEST NEWS