கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-
நாட்டில் விளையாட்டுத்துறை சார்ந்த சங்கங்கள் மற்றும் அமைப்புகளில் போட்டியிடுவதற்கு அமைச்சர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் கோலாலம்பூர் கால்பந்து சங்கத்தின் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடுவதை மீட்டுக்கொண்டுள்ளதாக நிக் நஸ்மி குறிப்பிட்டார். அமைச்சவை எடுத்துள்ள இந்த முடிவை தாம் மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.