கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-
தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF- பிற்கு தொழிலாளர் சார்பில் தாங்கள் செலுத்த வேண்டிய சந்தாப்பணத்தை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள நிறுவனங்களின் 635 இயக்குநர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர்..
சந்தாப் பணத்தை செலுத்தாமல் இருக்கும் முதலாளிகள் மற்றும் இயக்குநர்களை கொண்டுள்ள பெயர் பட்டியலை மலேசிய குடிநுழைவுத்துறையிம் EPF வழங்கிவிட்டதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி சசாலிசா ஜைனுதீன் தெரிவித்தார்.
இந்தப் பெயர் பட்டியல், இவ்வாண்டு ஜனவரிக்கும் ஜுன் மாதத்தற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தை கொண்டதாகும் என்று அவர் விளக்கினார்.
தங்கள் தொழிலாளர்களுக்கு EPF சந்தா செலுத்தாத நிறுவன இயக்குநர்கள், நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவர்கள் தொழிலாளர் நலனை காதுகாக்கத் தவறியது மூலம் குற்றம் இழைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.