மின்சாரம் தாக்கி பாகிஸ்தான் ஆடவர் மரணம்

கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 28-

கோலசிலாங்கூரில் உள்ள ஒரு Pasaraya-விற்கு பின்புறம் நடைபெற்ற உணவு விழாவில் எதிர்பாராத விதமான இரும்புத்தூணை பிடித்த பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று இரவு 8.50 மணியளவில் நிகழ்ந்தது. மின்சாரம் தாக்கிய அடுத்த கணமே தூக்கி எறியப்பட்ட 32 வயதுடைய அந்த அந்நிய ஆடவர், சுயநினைவு இழந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் முகமது அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

உணவு விழாவில் அமைக்கப்பட்டு இருந்த கூடாரத்தின் இரும்புத்தூணின் வாயிலாக மின்சாரம் பாய்ந்துள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS