கேமாமன் , ஆகஸ்ட் 28-
விரைவு பேருந்தில் பயணம் செய்த 23 வயது பெண்ணிடம் ஆபாச சேட்டைப் புரிந்து மானபங்கம் செய்ததாக அந்த பேருந்தின் இரண்டாவது ஓட்டுநர் , கேமாமன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
முஹம்மது பாரிஸ் ஜஹாருதீன் முகமது ஃபாதில் என்ற அந்த பேருந்து ஓட்டுநர், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கோலத்திரெங்கானுவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தின் மேல் அடுக்கில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.