அந்த வழக்கை தீர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் மாநகரில் ஆர் ஆடம்பர குடியிரப்புப்பகுதியில் 20 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த முன்னாள் டச்சு மாடல் அழகியான 18 வயதுஇவானா எஸ்தர் ராபர்ட் ஸ்மிட் மரணம் தொடர்பில் அவரின் தாயார் தொடுத்துள்ள வழக்கை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.

நிர்வாணக்கோலத்தில் இறந்து கிடந்த அந்த முன்னாள் மாடல் அழகியின் மரணம் தொடர்பில் மானநஷ்ட இழப்பீடு கோரி, அவரின் 60 வயது தாயார் கிறிஸ்டினா கரோலினா இந்த வழக்கை தொடுத்து இருந்தார்.

டாங் வாங்கி போலீஸ் நிலையத் தலைவர், போலீஸ் து றை மற்றும் அரசாங்கம் என மூன்று தரப்பினருக்கு எதிராக அந்த அந்நிய நாட்டு மாது இந்த வழக்கை பதிவு செய்து இருந்தார்.

அந்த மாடல் அழகி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி கோலாலம்பூர், CapSquare Residence என்ற கட்டத்தில் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து முத்தரப்புக்கு எதிராக அந்த முன்னாள் மாடல் அழகியின் தாயார் இந்த வழக்கை தொடுத்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS