ரவூப்பில் தீபாவளி சந்தைக்கு கடைகள் வரவேற்பு

ரவூப் , ஆகஸ்ட் 28-

பகாங், ரவூப் வட்டாரத்தில் கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் தீபாவளி சந்தை மிக பிரமாண்டபமான அளவில் ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது.

வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையில் முற்பகல் 11.00 மணியிலிருந்து இரவு 11.00 மணி வரையில் ரவூப் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் பூசத் தகங்கன் ரௌப் என்ற இடத்தில் இந்த தீபாவளி சந்தை நடைபெறவிருப்பதாக அதன் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் N. தர்மராஜா செட்டியார் தெரிவித்தார்.

ஓரிட மக்கள் தீபாவளியை குதூகலத்துடன் வரவேற்கும் அதேவேளையில் தீபாவளி சந்தைக்கு வருகைப்புரிந்து, தங்கள் தேர்வுக்குரிய பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக தீபாவளி சந்தையில் தீபத்திருநாளுக்கு ஏற்புடைய அனைத்து வகையான கடைகளையும் அமைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீபாவளி சந்தையில் வியாபாரம் செய்ய ஆர்வம் கொண்டுள்ளவர்கள் தம்மை தொடர்பு கொள்ளும்படி தர்மராஐா கேட்டுக்கொண்டுள்ளார்.

காலணி கடைகளை அமைப்பதற்கும் வியாபாரிகள் வரவேற்கப்படுகின்றனர். மேல்விபரங்களுக்கு தம்மை தொடர்பு கொள்ளுமாறு தர்மராஐா கேட்டுக்கொண்டுள்ளார்.

Caption

N. தர்மராஜு செட்டியார்,
தீபாவளி சந்தை ஏற்பாட்டுக்குழுத் தலைவர்,
தொடர்புக்கு: En. Darmarajah Chettiar@CD Raja 010 9609312.

WATCH OUR LATEST NEWS