கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-
இந்திய, ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 48 மாது, கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் மண் அமிழ்வில் / பாதாள சாக்கடையில் விழுந்து காணாமல் போன சம்பவத்தில் அந்த இந்திய மாதுவை தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இந்திய தூதரகம் அணுக்கமான ஒத்துழைப்பை நல்கி விருகிறது.
8 மீட்டர் பாதாளத்தில் விழுந்த விஜயலெட்சுமியை தேடும் பணி இன்று புதன்கிழமை ஆறாவது நாளாக நடைபெற்று வந்த போதிலும், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய ஏஜென்சிகளுடன் தாங்கள் அணுக்கமான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே கோலாலம்பூர் மக்களின் நடமாட்த்திற்கு இன்னமும் பாதுகாப்பான பகுதியாகும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா அறிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் குறிப்பாக மஸ்ஜிட் இந்தியாவில் பாதுகாப்பு நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதிலும் கோலாலம்பூர் இன்னமும் பாதுகாப்பாக பகுதியாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் ஜலேஹா தெரிவித்தார்.