புத்ராஜெயா,ஆகஸ்ட் 28-
எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்துள்ளது.
பெட்ரோல் ரோன் 97 லிட்டருக்கு 3 வெள்ளி 42 காசாகவும், டீசல் லிட்டருக்கு 3 வெள்ளி 18 காசாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.