புத்ராஜெயா,ஆகஸ்ட் 28-
நாட்டின் 67 ஆவது சுதந்திரத் தின கொண்டாட்டம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சனிக்கிழமை புத்ராஜெயாவில் கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கான தேசிய தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு இஸ்தானா நெகாராவில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
தாங்கள் அளித்துள்ள விளக்கத்தில் மாமன்னர் மனநிறைவு தெரிவித்து இருப்பதாக தேசிய தினக் கொண்டாட்ட ஏற்பாட்டுக்குழுவிற்கு தலைமையேற்றுள்ள ஃபஹ்மி ஃபாட்சில் விளக்கினார்.