கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-
2027 ஆம் ஆண்டுக்கான தென்கிழக்காசிய விளையாட்டான சீ விளையாட்டுப்போட்டியை மலேசியா ஏற்று நடத்தவிருக்கிறது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ் அறிவித்துள்ளார்.
தென்கிழக்காசியப் பிராந்தியத்திற்கான அந்த விளையாட்டை ஏற்று நடத்துதற்கு மலேசியா உபசரணை நாடாக விளங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஹன்னா யோவ் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திற்கு தலைமையேற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதற்கு ஒப்புதல் அளித்து இருப்பதாக ஹன்னா இயோ தெரிவித்தார்.