ஜார்ஜ் டவுன, ஆகஸ்ட் 28-
பினாங்கில் மூன்று மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நுழைந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் நான்கு ஆடவர்களையும், இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிலாங்கூரிலும், பினாங்கிலும் மேற்கொள்ளப்பட்ட ஐந்து சோதனை நடவடிக்கைகளில் உள்ளூரைச் சேர்ந்த 18 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.
பினாங்கில் செபெராங் பெரை தெங்கா, செபெராங் பெரை உதாரா மற்றும் செபராங் பேரை செளடன் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நுழைந்து இவர்கள் கொள்ளையிட்டுள்ளதாக நம்பப்படுகிறது என்று டத்தோ ஹம்சா அகமது குறிப்பிட்டார்.
இந்த கொள்ளைக்கும்பல், கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.