கோத்தா பாரு, ஆகஸ்ட் 29-
கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ் பகுதி கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலிருந்துஜாலான் ராஜா லௌட் வரையில் 1.4 மீட்டர் தூரத்தைக்கொண்ட பாதை மூடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் இன்று அறிவித்துள்ளார்.
மஸ்ஜிட் இந்தியா பகுதிக்கு பொறுப்பேற்றுள்ள டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தின் தலைவர் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
மூடப்பட்டுள்ள இந்த சாலையானது, பாதாள சாக்கடை கால்வாயில்களின் 5 சிலாப்பு பகுதிகளை கொண்டதாகும். அந்த சாலைப்பகுதி மட்டுமே மூடப்படுவதற்கு இதுவரை உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் இல்லை என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் முக்கிய வர்த்தகப்பகுதியான ஜாலான் மஸ்ஜிட் இந்தியா ஒரு பாதுகாப்பு அற்றப்பகுதி என்று இப்போதைக்கு எந்தவொரு பிரகடனத்தையும் வெளியிட இயலாது என்று ஐஜிபி தெளிவுபடுத்தினார்.