பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 29-
பிகேஆர் கட்சியின் முன்னாள் கபார் நாடாளுமன்ற உறுப்பினரும்,டெக்குன் தலைவருமான அப்துல்லா சானி அப்துல் ஹமீத் , இரண்டு தினங்களுக்கு முன்பு நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் பார்க்கும்படியாக, தனது காற்சட்டையின் இடுப்புப்பகுதியில் கைதுத்துப்பாக்கியை செருகி வைத்திருந்த காட்சியை சித்தரிக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கோலாலம்பூர் கால்பந்து சங்கத்தின் இடைக்காலத் தலைவருமான அந்த பிகேஆர் முன்னாள் எம்.பி., செய்தியாளர் கூட்டத்தில் நின்றவாறு பேசிய போது, அனைவரும் பார்க்கும்படியாக இடுப்பில் அவரின் கைத்துப்பாக்கி காணப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் துப்பாக்கியுடன் காணப்படும் காட்சி குறித்து விளக்கம் அளித்த முன்னாள் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைருமான அப்துல்லா சானி, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கைத்துப்பாக்கியை வைத்திருப்பதற்கான உரிமத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
துப்பாக்கியை எங்கும் விட்டுச் செல்ல முடியாது. எப்போதும் என் வசம் இருக்க வேண்டும். நான் செல்லும் இடமெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்று பதில் ளித்துள்ளார்.