கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் நிகழ்ந்துள்ள பேரிடர் தொடர்பில் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து கூட்டரசுபிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு இந்த செய்தியாளர் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த செய்தியாளர் கூட்டத்தில், இந்தியப் பிரஜை விஜயலெட்சுமி தேடும் பணி குறித்த ஆகக்கடைசி நிலவரங்களை தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 மணிக்கு திட்டமிடப்பட்ட அந்த செய்தியாளர்கள் கூட்டம், சற்று தாமதமாகி வருகிறது. அந்த செய்தியாளர் கூட்டத்தில் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி- யும் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில் மலேசியாவிற்கான இந்திய தூதர் BN ரெட்டியும் மஸ்ஜிட் இந்தியாவிற்கு விரைந்துள்ளார். பிற்பகல் 3.40 மணியளவில் மஸ்ஜிட் இந்தியாவை வந்தடைந்த இந்திய தூதர் B.N. ரெட்டி, விஜயலெட்சுமி விழுந்த பகுதியை பார்வையிட்டார். அவருடன் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி- யும் காணப்பட்டார்.