பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 29-
அந்நிய நாட்டுப் பிரிஜைகளுக்கு குடிநுழைவுத்துறை தொடர்புடைய போலி ஆவணங்களை தயாரிக்கும் கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்ப்படும் 23 வயதுடைய வங்காளதேச ஆடவரை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.
புத்ராஜெயா குடிநுழைத்துறை ஒருங்கிணைப்புடன் இன்று காலை 9.05 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் ஒரு குடியிருப்புப்பகுதியில் அந்த வங்காளதேசப் பிரஜை கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்றை தலைமை இயக்குநர் டத்துக் ரஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.
உளவுத்துறை தகவலின் வழி அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதுடன், 21 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய மேலும் நான்கு வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக டத்தோ ருஸ்லின் குறிப்பிட்டார்.