பிடிபட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 29-

இங்கிலாந்துக்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகள், கஞ்சா வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மலேசியாவிற்கான இங்கிலாந்து தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பில் அண்மைய காலமாக பிடிபடுகின்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டில் பிடிபட்ட 378 வெளிநாட்டு சுற்றுப்பயணிகளில் 93 பேர் மலேசியர்கள் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடமிருந்து இதே காலக்கட்டத்தில் 15 டன் போதைப்பொருள் கைப்பற்றப்பபட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS