குடும்பமாது மரணத்தில் குற்றத்தன்மை உள்ளது

குவாந்தன் , ஆகஸ்ட் 29-

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி குவந்தான், இன்டெரா மஹ்கோட்டா-வில் உள்ள தனது வீட்டின் படுக்கை அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட தடயங்களுடன் இறந்து கிடந்த குடும்ப மாதுவின் மரணத்தில் குற்றத்தன்மை உள்ளது என்று போலீசார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

கழுத்தில் ஏற்பட்ட இறுக்கத்தின் காரணமாக 28 வயதுடைய அந்த மாது மரணம் அடைந்துள்ளார் என்று சவப்பரிசோதனை அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது என்று குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் டத்துக் செரி யஹயா ஓத்மான் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த மாதுவின் வளர்ப்புத் தந்தை, மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS