திவால் அறிவிப்பு கோரி, அல்தானுயா குடும்பத்தினர் விண்ணப்பம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-

முன்னாள் மங்கோலிய மாடல் அழகி அல்தானுயா ஷாரிபுக்கு படுகொலையில் தொடர்புடைய நபர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிந்தா-வை திவால்தாரராக அறிவிக்கக்கோரி, அந்த முன்னாள் மாடல் அழகியின் குடும்பத்தினர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அல்தான்துயா படுகொலை தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு 92 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக அப்துல் ரசாக் பாகிந்தா Abdul – வழங்க வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப அந்த இழப்பீட்டுத்தொகையை வழங்க அந்த அரசியல் ஆய்வாளர் தவறிவிட்டார்.

எனவே அப்துல் ரசாக் பாகிந்தா-வை திவால்தாரராக அறிவிக்கக்கோரி, அல்தான்துயாவின் தந்தை டாக்டர் ஷாரிபூ செட்டேவ் மற்றும் தாயார் Altantsetseg ஆகியோர் கர்ப்பால் சிங் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக இந்த வழக்கு மனுவை சார்வு செய்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS