பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 29-
கட்டாய பாலியல் தொழிலாளர்களாக கொத்தடிமைகளைப் போல் நடத்தப்பட்டு வந்த 6 வெளிநாட்டுப் பெண்களை குடிநுழைவுத்துறை மீட்டுள்ளது.
கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு கடை வீட்டில் நேற்று இரவு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையல் 5 வியட்நாம் பெண்களும், ஒரு தாய்லாந்துப் பெண்ணும் காப்பற்றப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் டத்துக் ரஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.
மனித கடத்தல் வாயிலாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இந்த அந்நிய நாட்டுப் பெண்களின் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.