குளுவாங் , ஆகஸ்ட் 29-
ஜோகூர், குளுவாங், தமன் ஸ்ரீ லம்பக், ஜலான் தபா அருகில் வீடமைப்புப்பகுதியின் துப்புரவு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட Aeriel 500 IBS ரகத்திலான வெடிகுண்டை போலீசார் வெற்றிகரமாக செயலிழக்க செய்துள்ளனர்.
இரண்டாவது உலகப்போரின் போது பயன்பாட்டுக்குரியது என்று நம்பப்படும் அந்த பழங்கால வெடிகுண்டு இன்று மாலை 5 மணியளவில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி பஹ்ரின் மொஹமட் நோ தெரிவித்தார்.
ஜோகூர்பாரு போலீஸ் ஒத்துழைப்புடன் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப்பிரிவினர் அந்த ரட்ஷச வெடிகுண்டை செயலிழக்க செய்ததாக ஏ.சி.பி பஹ்ரின் குறிப்பிட்டார்.