கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
மியன்மாரில் மனித கடத்தல் வர்த்தக கும்பலுடன் மலேசிய அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.
இதனை SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி உறுதி செய்துள்ளார். மியன்மாரில் மனித கடத்தல் வர்த்தகம் தொடர்பில் ஒரு கும்பலுடன் மலேசிய பெண் அரசியல்வாதியும், அவரின் கணவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக மலேசிய அனைத்துலக சமூகம் மீதான மனித உரிமை அமைப்பு, நேற்று புதன் கிழமை மகஜர் ஒன்றை SPRM- மிடம் சமர்ப்பித்துள்ளது.
இதனிடைய இந்த மனித கடத்தலில் தாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் துறை துணை அமைச்சரும், முன்னள் பேலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் மஷிதா இப்ராஹிம் மறுத்துள்ளார்.