காதல் மோசடியில் மூதாட்டி 19 லட்சம் வெள்ளியை இழந்தார்

கோலாலம்பூர், செப்டம்பர் 01-

காதல் வலையில் சிக்கிய 64 வயது மூதாட்டி, Love scam
மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்புப்பணமான 19 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளார்.

ஷா ஆலாம், Bukit Jelutong- கை, சேர்ந்த அந்த மூதாட்டி, தாம் ஏமாற்றப்பட்டது குறித்து நேற்று மாலை 4.10 மணியளவில் போலீசில் புகார் செய்துள்ளார் என்ற சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

அந்த மூதாட்டி கடந்த மே மாதம் முதல் மாறுப்பட்ட வங்கி கணக்குகளில் 12 முறை பணம், பரிவர்த்தனை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது எ ன்று அவர் குறிப்பிட்டார்.

பணி ஓய்வுப்பெற்றவரான அந்த மூதாட்டியின் புகார், குற்றவில் சட்டம் 420 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்ட வருவதாக டத்தோ உசேன் உமர் கான் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS