MyPPP கட்சியை மீண்டும் பாரிசானில் சேர்த்துக்கொள்வதா?

கோலாலம்பூர், செப்டம்பர் 01-

MyPPP எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சியை ஓர் உறுப்புக்கட்சியாக பாரிசான் நேஷனலில் சேர்த்துக்கொள்வதா, இல்லையா? என்பது குறித்து அக்கூட்டணியின் அடுத்த உச்சமன்றக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு MyPPP கட்சியின் நிலை, பாரிசான் நேஷனலை ஆதரிக்கும் ஒரு தோழமைக்கட்சியாகும். அதனை மீண்டும் பாரிசான் நேஷனலில் சேர்ப்பதா? இல்லையா? என்பது குறித்து பாரிசான் நேஷனலின் உச்சமன்றத்தை பொறுத்ததாகும் என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

டத்தோ டாக்டர் லோக பால மோகன் – னை தற்போது தலைவாக கொண்டுள்ள MyPPP, மீண்டும் பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியாக சேர்த்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து அடுத்த உச்சமன்றக்கூட்டத்தில் உறுப்புக்கட்சிகளுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

அந்த கட்சி மறுபடியும், பாரிசான் நேஷனலில் இணைவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS