பினாங்கு சுதந்திர தினக்கொண்டாட்டம்

ஜார்ஜ் டவுன் , செப்டம்பர் 01-

நாட்டின் 67 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டத்தை பினாங்கு மாநில அரசு, பதங் கோட்டா லாமா -வில் நேற்று வெகு சிறப்பாக நடத்தியது.

“Malaysia Madani: Jiwa Merdeka: என்ற கருப்பொருளுடன் பினாங்கு மாநில அளவிலான சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

சுதந்திரத் தின கொண்டாட்டத்தை பினாங்கு மாநில ஆளுநர் துன் அஹ்மத் புசி அப்துல் ரசாக் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் – தலைமையில் நடைபெற்ற தேசிய தினக்கொண்டாட்டத்தில் அரசாங்க ஏஜென்சிகள், இலாகாக்கள் மற்றும் தனியார் துறையின் அணிவகுப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பினாங்கு ஆளுநர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் பிரதான மேடையில் இருந்தவாறு அணிவகுப்புகளை பார்வையிட்டனர்.

சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் முதல் முறையாக இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன் தலைமையில் 125 க்கும் மேற்பட்டவர்கள் இந்த அணிவகுப்பில் பங்கு கொண்டது, மாநில இந்துக்களுக்கு பெருமை சேர்த்தது.

WATCH OUR LATEST NEWS