ஹுலு சிலாங்கூர் ,செப்டம்பர் 01-
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ரவாங், புக்கிட் பெருந்துங் -கில் சுட்டுக்கொல்லப்பட்ட 36 வயது மதிக்கத்தக்க ஓர் இந்திய ஆடவர் 16 குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிறப்புக்குழுவினர் மேற்கொண்ட இந்த அதிரடித் தாக்குதலில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
துப்பாக்கியை ஏந்திய நிலையில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்வங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் அந்த ஆடவர் ஈடுபட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
அந்த ஆடவருடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மேலும் சில நபர்களை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தன்று போலீசாரின் உத்தரவையும் மீறி, தனது வாகனத்தை நிறுத்த மறுத்த அந்த இளைஞரை போலீசார் பின்தொடர்ந்து சென்ற போது, போலீசாரை நோக்கி அந்த நபர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக டத்தோ ஹுசேன் ஒமார் குறிப்பிட்டார்.
தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டததாக டத்தோ ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.