ஒன்றிணைந்து முழு வீச்சில் செயல்பட்டனர்

கோலாலம்பூர், செப்டம்பர் 01-

மஸ்ஜிட் இந்தியாவில் ஆளை விழுங்கிய சாக்கடை பாதாளக்குழியில் விழுந்த இந்தியப் பிரஜையை தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் மீட்புப்பணியைச் சேர்ந்த 194 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். .

ஒன்பது நாட்காக தேடப்பட்ட மீட்பு நடவடிக்கையில் அந்த இந்தியப் பிரஜையை கண்டு பிடிக்க முடியவில்லை என்ற போதிலும் மீட்புப்பணி வீரர்கள் முழு வீச்சில் செயல்பட்டுள்ளனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுலிஸ்மே அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

மீட்புப்பணி தொடங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து நேற்று வரையில் ஒன்பது நாட்களாக நடைபெற்ற நிலையில் எந்தவொரு வீரரிடம் சோர்வை காண முடியவில்லை. அதேவேளையில் அனைத்த அரசாங்க ஏஜென்சிகளும் ஒருங்கிணைந்த நிலையில் ஒரு குழுவினராக செயல்பட்டுள்ளனர் என்று அந்த உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார். .

மலேசியாவிற்கு வருகை தந்த ஒரு சுற்றுப்பயணிக்கு நேர்ந்த துயரத்தில் அனைத்து வீரர்களும் பங்கு கொண்டு, தங்களின் உற்சாகமிகுந்த பங்களிப்பை காட்டியதற்காக அவர்கள் அனைவருக்கும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சுலிஸ்மே அஃபெண்டி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS