கோலாலம்பூர், செப்டம்பர் 01-
ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமி, ஆளை விழுங்கிய குழியில் விழுந்து, காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து அவரை தேடும், பணி கடந்த ஒன்பது நாட்களாக கடுமையான போராட்டத்திற்குப்பின் நேற்று நிறுத்தப்பட்டது. கோலாலம்பூர் மாநகரின் முக்கிய வர்த்தகப்பகுதியான மஸ்ஜிட் இந்தியாவில் நிகழ்ந்த இந்த துரயச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக நிலைக்குத்தியிருந்த அந்த வணிகத் தளத்தின் வர்த்தகம், இன்று ஞாயிற்றுக்கிழமை ச வழக்க நிலைக்கு மேல்ல திரும்பியுள்ளது. .
இந்தியா, ஆந்திரப்பிரதேசம், சித்தூர் மாவட்டம், கும்பம் பகுதியைச் சேர்ந்த ஒரு சுற்றுப்பயணியான 48 வயது விஜயலெட்சுமி என்ன ஆனார் என்பதற்கான சிறிதளவு தடயம்கூட கிடைக்காத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்ட இந்த மீட்புப்பணி கைவிடப்படுவதாக கூட்டரசுப்பிரதேச அமைச்சர் ஜலேஹா முஸ்தபா நேற்று அறிவித்தார்.
மஸ்ஜிட் இந்தியாவில் நில அடையாளத்தை தாங்கிய Wisma Yakin-னிலிருந்து Semua House வரை பாதுகாப்பு வளையங்கள் கட்டுப்பட்டு, மீட்புபணி நடைபெற்று வந்த வேளையில் மக்கள் நிறைந்த சுறுசுறுப்பான அந்த வர்த்தகப்பகுதி கடந்த எட்டு நாட்களாக மக்கள் நடமாட்டம் பெருவாரியாக குறைந்து களை இழந்து காணப்பட்டது.
எனினும் மீட்புப்பணி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்த சில இடங்களில் மட்டுமே பாதுகாப்பு வளையங்கள் அகற்றப்பட்ட போதிலும் பல பகுதிகளில் பாதுகாப்பு வளையங்கள் தொடர்ந்து கட்டப்பட்டுள்ளன
மீட்புப்பணிக்கு வழிவிடும் வகையில் மூடப்பட்டு இருந்த சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்பது நாட்களாக வாடிக்கையாளர்கள் இல்லை என்பதை வணிகர்கள் பலர் ஒப்புக்கொண்டனர்.
எனினும் மஸ்ஜிட் இந்தியா முன்புபோல் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் எடுக்கலாம் என்பதை வணிகர்கள் தெரிவித்தனர். மஸ்ஜிட் இந்தியா, ஒரு பாதுகாப்பற்றப்பகுதி என்ற அச்சம் மக்கள் மத்தியில் இன்னமும் நிலவி வருகிறது. அந்த அச்சமும், எண்ணமும் மறைவதற்கு சிறிது காலம் ஆகலாம் என்ற வர்த்தகர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்தனர். .