ஈப்போ , செப்டம்பர் 01-
கடந்த மாதம் அறிமுகமான மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆடவர் ஒருவர், ஜோகூர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
21 வயது முஹம்மது ஃபக்ருல்ராசி முஹம்மது என்ற அந்த இளைஞர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 7 மணியளவில் குளுவாங்கில் உள்ள ஒரு வீட்டில் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 ஆவது பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.