பெலாபுஹான் கிளாங் , செப்டம்பர் 01-
கோலக்கிள்ளான், West Port துறைமுகத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு இருந்த லோரி ஒன்று, கடலில் விழுந்ததில் அதன் ஓட்டநரும் நீரில் மூழ்கினார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிமை மதியம் 12.42 மணியளவில் அந்த மேற்கு துறைமுகத்தில் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்தது.
24 வயதுடைய அந்த லோரி ஓட்டுநரை தேடும் பணியில் புலாவ் இந்தா தீயணைப்பு, மீட்புப்படையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முஹம்மது ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
கடல்சார் படையான Maritim Malaysia- வின் ஒத்துழைப்புடன் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.