பெலாபுஹான் கிள்ளான் ,செப்டம்பர் 01-
மியன்மார் பிரஜைகள் சம்பந்தப்பட்ட மனித வர்த்தகத்தில் முன்னாள் துணையமைச்சர் ஒருவர் ஈடுபட்டதாக கூறப்படுவது தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
இவ்விவகாரத்தை உறுதிப்படுத்திய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், இதன் தொடர்பில் மேல் விபரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர். விசாரணை அறிக்கை திறக்கப்பட்டதன் அடிப்படையில் காவல் துறை கொண்டிருக்கும் தொழில் நிபுணத்துவம் குறித்து தாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மியன்மாரில் மனித வர்த்தகத்தில் அரசியல்வாதியும் அவரின் கணவரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தும்படிக் கோரி மலேசிய அனைத்துலக சமூக மனிதாபிமான் அமைப்பு ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அண்மையில் புகார் அளித்திருந்தது.