நெகிரி செம்பிலான் ,செப்டம்பர் 01-
தோட்டத் தொழிலிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள தனது அங்கத்தினர்கள், தொடர்ந்து தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்கள் உற்பத்தித்துறை சார்ந்த திறன் பயிற்சியை பெரும் நோக்கில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமான NUPW, அவர்களுக்கு மறுகட்டமைப்புக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
அந்த வகையில் நெகிரி செம்பிலான், Labu-வில் SIme Darby நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்த செம்பனை ஆலை, மூடுவிழா கண்டதைத் தொடர்ந்து அதில் பாதிக்கப்பட்ட 26 தொழிலாளர்கள், உற்பத்தித்துறைக்கான பயிற்சிகளை பெறும் பொருட்டு அவர்களுக்கு சான்றிதழுடன் கூடிய 5 நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
சொக்சோ மற்றும் HRD. Corp- பினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான Vino Cahaya Resources மூலமாக கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் உற்பத்தித்துறை சார்ந்த இந்த நிபுணத்துவ பயிற்சி , பாலைராய கம்பொங் பத்து லாபு- வில் வழங்கப்பட்டது. மறு வேலை தேடுகின்றவர்களுக்கு உற்பத்தித்துறை சார்ந்த அடிப்படை பயிற்சியை வழங்கும் வகையில் இந்த ஐந்து நாள் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டதாக பயிற்சியின் தொகுப்பாளர் டாக்டர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தோட்டத் தொழில் சார்ந்த 292 தோட்டத் தொழிலார்கள்கள், Sime Darby நிறுவனத்தினால் நீக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு மறு வேலையை தேடிக்கொடுக்கும் வகையிலேயே தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பெரும் முயற்சியில் இது போன்ற பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதன் நெகிரி செம்பிலான் நிர்வாகச் செயலாளர் சாந்தக்குமார் பச்சையப்பன் தெரிவித்தார்.
வேலையிழந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த பயிற்சிகள் மட்டுமின்றி, வேலை வாய்ப்புகள், , நேர்முகப்பேட்டி நடக்கும் இடங்கள் போன்ற விவரங்களையும் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கையில் Vino Cahaya Resources ஈடுபட்டு வருகிறது.
Caption
டாக்டர் ராஜேந்திரன்,
தொகுப்பாளர், Vino Cahaya Resources
சாந்தகுமார் பச்சையப்பன்,
நிர்வாகச் செயலாளர், நெகிரி செம்பிலான் NUPW