கோலாலம்பூர், செப்டம்பர் 01-
நாட்டின் தேசியத் தின கொண்டாட்டமான நேற்று சனிக்கிழமை, ரவுடி கும்பல் ஒன்றிடம் சிக்கிக்கொண்ட ஆஸ்திரேலிய மாது ஒருவர், தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டு, பெரும் தலைக்குனிவுக்கு ஆளானதாக புகார் தெரிவித்துள்ளார்.
கிள்ளானிலிருந்து கோலாலம்பூருக்கு மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயிலில் வந்து கொண்டிருந்த போது, மலேசியாவில் கடந்த 50 ஆண்டு காலமாக வசித்து வரும் அந்த ஆஸ்திரேலிய மாதுவை சுற்றியும் வளைத்துக்கொண்ட அந்த ரவுடிக் கும்பல், அந்த மாதுவை கடுமையாக நிந்தித்ததாக அவரின் மகள், இன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மகளிருக்காக பிரத்தியேகமாக விடப்பட்டுள்ள சிறப்பு ரயில் பெட்டியில் 72 வயதான ஒரு முன்னாள் ஆசிரியையான தமது தாயாருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர்களுக்காக பிரத்தியேமாக விடப்பட்டுள்ள அந்த சிறப்பு ரயில் பெட்டியில் ஆண்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.