மஸ்ஜிட் இந்தியாவை சீர்படுத்த 6 மாதங்கள் ஆகலாம்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 01-

பாதாள சாக்கடையில் விழுந்த விஜயலெட்சுமியை தேடுவதற்காக கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில், தோண்டப்பட்டுள்ள குழிகள், உடைக்கப்பட்ட சிமெண்ட் பகுதிகள் ஆகியவற்றையும் சீர்படுத்துவதற்கு 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வுக்கு உரிய பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளையும் சீர்ப்படுத்தப்பட வேண்டியுள்ளன.

எனவே கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெயியிட்டுள்ள உத்தரவுகள் மற்றும் வழிகாட்டிகளை பின்பற்றுமாறு பொது மக்களை கோலாலம்பூர் மாநகர் மன்ற டத்தோ பண்டார் Dr Maimunah Mohd Sharif கேட்டுக்கொண்டுள்ளார். .

WATCH OUR LATEST NEWS