விஜயலெட்சுமியின் குடும்பத்தினர் இறுதி சடங்கை நடத்தினர்

கோலாலம்பூர், செப்டம்பர் 01-

கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் ஆளை விழுங்கும் பாதாள சாக்கடையில் விழுந்து காணாமல் போன இந்தியாவைச் சேர்ந்த விஜயலெட்சுமியின் குடும்பத்தினர், அந்த மாது விழுந்த பாதாளக்குழி அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதி சடங்கு செய்தனர்.

கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்ற விஜயலெட்சுமியை தேடும் மீட்பு நடவடிக்கை, நேற்று அதிகாரப்பபூர்வமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து 48 வயதுடைய அந்த இந்திய மாது, இறந்து விட்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விஜயலெட்சுமி உயிருடன் வருவார் என்ற நம்பிக்கையில் கடந்த ஒன்பது நாட்களாக மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் மிகுந்த சோகத்துடன் காத்திருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள், மீட்புப்பணி நிறுத்தப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டதைதத் தொடர்ந்து அவரின் இறப்பையும் மிகுந்த துயரத்துடன் பதிவு செய்துள்ளனர்.

இந்தியா, ஆந்திரபிரதேசத்திற்கு புறப்படுவதற்கு முன்னாக விஜயலெட்சுமியின் கணவர் மாத்தையா , மகன் சூரியா மற்றும் விஜயலெட்சுமியின் சகோதரி ஆகியோர் மஸ்ஜிட் இந்தியாவில் விஜயலெட்சுமி விழுந்து காாணமல் போன இடத்தில் விளக்கு ஏற்றி, சூடம், சாம்பிராணி தூபம் காட்டி, , தீபாரதணை மற்றும் பிரார்த்தனை செய்தனர். விஜயலெட்சுமி கடைசியாக நடந்து வந்த இடத்தில் தேங்காய் உடைத்து சில சாங்கியங்களையும் செய்தனர்.

விஜயலெட்சுமியின் குடுபத்தினர், அவ்விடத்தில் இறுதி சடங்கு செய்வதற்கு போலீஸ் துறை அனுமதி அளித்ததுடன், உரிய பாதுகாப்பையும் வழங்கினர்.

WATCH OUR LATEST NEWS