கோலாலம்பூர், செப்டம்பர் 02-
மியன்மார் பிரஜைகள் சம்பந்தப்பட்ட மனித வர்த்தகத்தில் ஈடுபட்டதாக ஒரு பெண் அரசியல்வாதியும், அவரின் கணவரும் தொடர்புபடுத்தி, பேசப்பட்டு வரும் வேளையில் இச்சம்பவம் தொடர்பாக டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட நபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மனித வர்ததகம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண் அரசியல்வாதி மற்றும் அவரின் கணவர் உட்பட மூன்று பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து இருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
தற்போது இச்சம்பவம் 2007 ஆம் ஆண்டு குடிநுழைவு, ஆள்கடத்தல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மியன்மாரில் மனித வர்த்தகத்தில் அரசியல்வாதியும் அவரின் கணவரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தும்படிக் கோரி மலேசிய அனைத்துலக சமூக மனிதாபிமான் அமைப்பு ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அண்மையில் புகார் அளித்திருந்தது.
இந்த குற்றச்சாட்டில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று முன்னாள் Baling எம்.பி.யும், பிரதமர் துறை முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ டாக்டர் மஷிதாஹி இப்ராஹிம் , சில தினங்களுக்கு முன்பு விளக்க்ம அளித்திருந்தார்.