விஜயலெட்சுமியை தேடுவதில் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரமே தூக்கம் / நினைவுகூர்ந்தனர் / களைத்துப்போன வீரர்கள்

கோலாலம்பூர், செப்டம்பர் 02-

கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஆளைவிழுங்கிய குழியில் விழுந்த ஓர் இந்தியப்பிரஜையான விஜயலெட்சுமியை தேடுவதில் தூக்கமின்றி, கடந்த ஒன்பது நாட்களாக இடைவிடாது போராடியதாக மீட்புப்பணியாளர்கள் நினைவுகூர்ந்தனர்.

அந்த இந்தியப்பிரஜை கிடைக்காமல் போனது, தங்களை மனமுடைய செய்தாலும் பல்வேறு ஏஜென்சிகளை உள்ளடக்கிய மீட்புப்பணியாளர்கள், தங்களின் பணித்தன்மைக்கு ஏற்ப அவரவர் கடுமையாக போராடியதாக மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையின் தலைமை இயக்குநர் ரோஜிஹான் அன்வர் மாமத் தெரிவித்தார்.

அந்த மாதுவை எப்படியாவது கண்டு பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையிலேயே மீட்புப்பணியாளர்கள் தங்கள் தேடுதல் பணியை அல்லும் பகலுமாக ஈடுபட்டனர். ஒவ்வொருக்கும் சராசரி 2 மணி நேரத்திற்கும் குறைவாக தூக்கமே மிஞ்சியது.

பகலில் அந்த பாதாள சாக்கடையின் நீரோட்டம் வேகமாகவும் வலுவாகவும் இருந்ததால், நீரின் வேகம் குறைவதற்காக விடியற்காலை 2 மணி வரையில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் தங்களுக்கு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மிக குறுகளாக அந்த பாதாள சாக்டையின் குழாயில் ஒரு முறை இரண்டு முக்குளிப்பவர்கள் மட்டுமே இறங்க முடிந்தது. நச்சு வாயு மிக கடுமையாக இருந்ததால் 20 நிமிடத்திற்கு ஒரு முறை ஆட்களை மாற்றி, மாற்றி இறக்க வேண்டியிருந்தது.


பாதாள சாக்கடையில் ஆபத்து அதிகளவில் காத்திருந்தாலும் அந்த இந்தியப் பிரஜையை ஒவ்வொரு மூலையிலும் தேடுவதில் வீரர்கள் காட்டிய அளப்பரிய பங்களிப்பு, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் அனுபவமாகும் என்று ரோஜிஹான் அன்வர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS