கோலாலம்பூர், செப்டம்பர் 02-
நகர பேருந்து ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில் அதன் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அதிர்ஸ்டவசமாக உயிர்த் தப்பினர்.
இச்சம்பவம் நேற்று மாலை 4.36 மணியளவில் கெடா, சுங்கைப்பட்டாணி, ஜாலான் குவாலா கெட்டில் சாலையில் நிகழ்ந்தது. சம்பவம் நிகழும் போது அந்த பேருந்தில் 7 பயணிகள் இருந்ததாக சுங்கைப்பட்டாணி தீயணைப்பு நிலைய துணை சூப்ரிடெண்டன்இஸ்மாயில் முகமது ஜைன் தெரிவித்தார்.
அந்த பேருந்து, சுங்கைப்பட்டாணியை நோக்கி சென்று கொண்டிருந்த போது, தீப்பற்றிக்கொண்ட நிலையில், பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அதன் ஓட்டுநரும், பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர்.
இத்தீவிபத்தில் பேருந்த 60 விழுக்காடு சேதமுற்றதாக அவர் மேலும் கூறினார்.