பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 02-
சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் Aerotrain ரயில் சேவை, அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செயல்படத் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இரண்டு ஜோடி, Aerotrain, கடந்த வாரம், மலேசியா வந்து சேர்ந்துள்ளது. அந்த Aerotrain, பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுவதற்கு முன்னதாக அவற்றை பொருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
Aerotrain –ஐ பொருத்துவது மற்றும் பரீட்ச்சார்த்த சேவை முதலியவற்றுக்கு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகலாம் என்றும் அவர் விளக்கினார்.
இன்று சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் புதிதாக வந்தடைந்த Aerotrain ரயில்களை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனை தெரிவித்தார்.