அயர் ஹிதம் , செப்டம்பர் 02-
நாட்டின் முன்னணி சங்கிலித்தொடர்பு வர்த்தகமாக KK SUPER MART- டின் முதலாவது கடை, பினாங்கில் திறப்பு விழா கண்டுள்ளது.
பினாங்கு, அயர் ஹிதம் – மில் அமைந்துள்ள KK SUPER MART- டின் முதலாவது கடையை கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நாட்டின் 2024 ஆம் ஆண்டின் தேசியத் தினம் கொண்டாடப்படுவதற்கு முதல் நாள், பினாங்கு மாநிலத்தில் KK SUPER MART- கடை திறக்கப்பட்டது ஒரு வரலாற்றுப்பூர்வ நிகழ்வாகும் என்று வர்ணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய KK SUPER MART- சங்கிலித் தொடர்பு வர்ததக குழுமத்தின் தோற்றுநரும், நிர்வாகத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே.சாய் , ஜார்ஜ் டவுன் முதல் பத்து ஃபெரிங்கி வரையில் தொன்மை நிறைந்த வரலாற்றைக் கொண்டுள்ள ஓர் இடத்தில் KK SUPER MART தனது முதலாவது கடையை திறந்து இருப்பது, பினாங்கு மாநில மக்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்குவதிலும், தங்கள் வர்ததகத்தின் அடைவு நிலையிலும் ஒரு குறிப்பிட்டத்தக்க நிகழ்வாகும் என்றார்.
மலேசியா முழுவதும் மட்டுமின்றி நேபாலும், இந்தியாவிலும் மொத்தம் 882 வர்ததகத் தளங்களை KK SUPER MART கொண்டுள்ளது. கிழக்கின் முத்து என்று வர்ணிக்கப்படும் பினாங்கில் KK SUPER MART தனது முதலாவது கடையை திறந்து இருப்பது மூலம் KK SUPER MART- வர்த்தகத் தளங்களின் எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளது என்று டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே.சாய் குறிப்பிட்டார்.
ஓரிட மக்களுக்கு தனது வர்த்தகத் சேவையை வழங்குவதில் தொடர்ந்து முனைப்புக்காட்டி வரும் முடிந்தவரையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதிலேயே அதிக சிரத்தை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு நிறைவான பயிற்சி அளிப்பதுடன் அவர்கள் வேலை செய்து கொண்டே டிப்ளோமா, TVET பயிற்சிகள் போன்ற கல்வி வாய்ப்புகளை பெறலாம். KK SUPER MART- டில் பணிபுர்ந்த 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டிப்ளோமா தொடர் கல்வியை மேற்கொண்டு இருப்பதையும்டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே.சாய் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.