கோலாலம்பூர், செப்டம்பர் 02-
மஸ்ஜிட் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வில் காணாமல் போன விஜயலெட்சுமியின் தேடும் பணி, கடந்த சனிக்கிழமை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரின் குடும்ப உறுப்பினர்கள், நேற்றிரவு இந்தியாவிற்கு பயணமாகினர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மே அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
விஜயலெட்சுமியின் கணவர் மாத்தையா, மகன் சூரியா ஆகியோர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வாயிலாக நாடு திரும்பியதாக ஏசிபி சுலிஸ்மே அஃபெண்டி சுலைமான் குறிப்பிட்டார்.
முன்னதாக, விஜயலெட்சுமி விழுந்த இடத்தில் விளக்கேற்றி, அவரின் குடும்ப உறுப்பினர்கள் இந்து முறைப்படி இறுதி பிரார்ததனை செய்ததாக பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.
தனது தாயார் விஜயலெட்சுமி விழுந்த குழிப் பகுதியிலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக்கொண்டு, மகன் சூரியா தாயகம் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.