பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 02-
கடந்த மே மாதம் 17 ஆம் தேதி ஜோகூர், உலு திரம் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் தந்தை மீது ஜோகூர்பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று புதிய குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
62 வயது ராடின் இம்ரான் ராடின் யாசின் என்ற அந்த நபர், IS தீவிரவாத கும்பல் தொடர்புடைய புத்தகங்களை தன் வசம் வைத்திருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியப் பட்சம் 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 130 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.