கோலாலம்பூர், செப்டம்பர் 03-
மியன்மாரில் மனித வர்த்தகத்தில் தாமும், தனது கணவரும் சம்பந்தப்பட்டு இருப்பதாக மாஃபியா கும்பலைப் போல் சித்தரிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் துறை துணை அமைச்சரும், முன்னாள் Baling எம்.பி.யுமான டத்தோ டாக்டர் மஷிதா இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
தங்களுக்கு மாஃபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை அந்த முன்னாள் பெண் துணை அமைச்சர் வன்மையாக மறுத்துள்ளார்.
மனித வர்தகத்தில் ஈடுபட்டு இருப்பதைப் போலவும், பகாங் சுல்தானுடன் அவயங்கள் விற்பனையில் ஈடுபட்டு இருப்பதைப் போலவும் தொடர்புபடுத்தி எடிசி சியாசட் செய்தி வெளியிட்டு இருப்பதைக் கண்டு தாம் அதிர்ச்சிக்குள்ளானதாக டத்தோ டாக்டர் மஷிதா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பகாங் சுல்தானை சந்தித்தப் படம், தீய நோக்குடன் பிரசுரிக்கப்பட்டதாகும். அது அவதூறான குற்றச்சாட்டாகும் என்று அவர் விளக்கினார்.